இதற்கிடையே, உலக தங்க கவுன்சிலின் மதிப்பீட்டின் மற்றொரு கூற்றைப் பார்ப்போம். அதன்படி, தங்கத்தின் விலை 5 முதல் 20% குறையலாம் என்றும் மதிப்பிட்டுள்ளது. அடுத்தாண்டு திருமணத்திற்கு திட்டமிடுபவர்களுக்கு இது ஒரு நிம்மதியான செய்தியாக இருக்கலாம். 2026ஆம் ஆண்டில் அமெரிக்க பொருளாதாரம் வேகமடைந்தால், டாலர் வலுப்பெற்று அமெரிக்க பத்திர வருவாய் உயர்ந்தால், தங்கத்தின் விலை 5% முதல் 20% வரை குறையக்கூடும். இந்த சூழ்நிலையில், மக்கள் பங்குகள் மற்றும் பிற ஆபத்தான முதலீடுகளில் முதலீடு செய்வார்கள். மேலும் தங்கத்திற்கான தேவையும் அப்போது குறையக்கூடும்.


