சிங்கப்பூரில் சிகரெட் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட தொடர்பில் 3 இந்தியர்களும் ஒரு சிங்கப்பூரரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து தீர்வை மற்றும் GST செலுத்தப்படாத சிகரெட்டுகளை பறிமுதல் செய்ததாக சிங்கப்பூர் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் இந்திய ஓட்டுநர் செய்த தவறு… அபராதம், வாகனம் ஓட்டத் தடை
அவற்றின் மதிப்பு சுமார் S$1.87 மில்லியனுக்கும் அதிகமானது என்றும் அது குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டில் சிங்கப்பூரில் நடந்த மிகப்பெரிய கடத்தல் இதுவாகும்.
பாண்டன் லூப் மற்றும் ஜூரோங் போர்ட் சாலையில் கடந்த நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் சோதனை நடவடிக்கை நடந்தது.
அப்போது தீர்வை செலுத்தப்படாத 17,279 அட்டைப் பெட்டி சிகரெட்டுகளையும் ஒரு வேனையும் சுங்கத்துறை பறிமுதல் செய்ததாக தெரிவித்துள்ளது.
இந்த கடத்தல் தொடர்பில் 27 வயது சிங்கப்பூர் ஆடவர் ஒருவரும் மேலும் 30 முதல் 39 வயதுக்குட்பட்ட மூன்று இந்திய ஆடவர்களுக்கு கைது செய்யப்பட்டனர்.
கட்டுமானப் பணியின்போது கண்டெடுக்கப்பட்ட 4 சவப்பெட்டிகள்: உறவினர்கள் தொடர்புகொள்ளலாம் – LTA அறிவிப்பு
பாண்டன் லூப்பில் உள்ள தொழிற்பேட்டை கட்டிடத்தில் கடந்த நவம்பர் 30 ஆம் தேதி சுங்க அதிகாரிகள் சோதனையை நடத்தினர்.
அங்கு 3 பேர், சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வேன் ஒன்றில் பெட்டிகளை ஏற்றுவதை கண்டனர். பின்னர் அதிகாரிகள் சோதனை நடத்தியதில், வேனில் இருந்து சுமார் 2,400 தீர்வை செலுத்தப்படாத சிகரெட் அட்டைப் பெட்டிகளைக் கண்டுபிடித்தனர்.
மேலும் அவர்களிடம் விசாரித்ததில், கட்டிடத்தில் இருந்து மேலும் 3,195 தீர்வை செலுத்தப்படாத அட்டைப் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனை அடுத்து அந்த ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வேன் மற்றும் தீர்வை செலுத்தப்படாத 5,595 அட்டைப் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேற்கொண்டு தகவல்களை சேகரித்த அதிகாரிகள், டிசம்பர் 1 அன்று ஜூரோங் போர்ட் சாலையில் உள்ள கிடங்கில் சோதனை நடத்தினர்.
அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த தீர்வை செலுத்தப்படாத 11,684 அட்டைப் பெட்டிகள் சிகரெட்டுகளையும் சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் விசாரணை தொடர்கிறது.

