Last Updated:
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-0 முன்னிலை பெற்றது; அடுத்த போட்டி அடிலெய்ட் மைதானத்தில்.
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியிலும் இங்கிலாந்து அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 334 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 511 ரன்கள் குவித்தது. 177 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் மைக்கேல் நேசர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 65 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 69 ரன்கள் அடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது போட்டி வரும் 17 ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறுகிறது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
December 07, 2025 6:54 PM IST


