Last Updated:
வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன் 17 முறையும், ஜாக் காலிஸ் 14 முறையும், சனத் ஜெய சூரியா 13 முறையும் தொடர் நாயகன் விருதை வென்றுள்ளனர்.
கிரிக்கெட் போட்டிகளில் அதிகமுறை தொடர் நாயகன் விருது வென்றதில் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் விராட் கோலி.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. மூன்று போட்டிகளில் 151 சராசரியுடன் 302 ரன்கள் எடுத்து விராட் கோலி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ராஞ்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி 135 ரன்கள் எடுத்தார். அதைத் தொடர்ந்து ராய்ப்பூரில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் 102 ரன்களும், விசாகப்பட்டினத்தில் நடந்த இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 65 ரன்களும் எடுத்தார்.
தொடர் நாயகன் விருது வென்ற பின்னர் அளித்த பேட்டியில் விராட் கோலி, இந்த தொடரில் நான் விளையாடிய விதம் எனக்கு திருப்தி அளிக்கிறது. நான் மிகவும் சுதந்திரமாக உணர்கிறேன். சூழ்நிலைக்கு ஏற்ப நீண்ட நேரம் என்னால் விளையாட முடியும். என்று தெரிவித்தார்.
இந்தத் தொடரில் கோலி 24 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்களை அடித்துள்ளார். சர்வதேச போட்டிகளைப் பொருத்தளவில் அதிகமுறை தொடர் நாயகன் விருது வென்றவர்களில் சச்சின் டெண்டுல்கர் 19 முறை வென்று முதலிடத்தில் இருந்து வந்தார்.
அவரது சாதனையை விராட் கோலி சமன் செய்திருந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் தொடர் நாயகன் விருது பெற்று சச்சினை பின்னுக்கு தள்ளியுள்ளார் விராட் கோலி.
வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன் 17 முறையும், ஜாக் காலிஸ் 14 முறையும், சனத் ஜெய சூரியா 13 முறையும் தொடர் நாயகன் விருதை வென்றுள்ளனர்.
December 07, 2025 2:43 PM IST


