Last Updated:
அவருக்கும் கிரிக்கெட்டுக்கும் சம்பந்தமே கிடையாது. அவர் அப்படி சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து முழுவதுமாக இழந்தது.
இதையடுத்து தற்போது நடைபெற்று முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. டெஸ்ட் போட்டி தொடர்களில் இந்திய அணி தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறித்து பல்வேறு தரப்பினர் விமர்சித்து வந்தனர்.
குறிப்பாக டெஸ்ட் போட்டிகளுக்கு தனி பயிற்சியாளர் நியமிக்க வேண்டும் என்றும் சில விமர்சனங்கள் கூறினர். குறிப்பாக ஐபிஎல் அணியான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இணை உரிமையாளர் பாரத் ஜிண்டல் டெஸ்ட் போட்டிகளுக்கு தனி பயிற்சியாளர் இருக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தார்.
இது பற்றி கௌதம் கம்பீரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் கூறியிருப்பதாவது: ஒரு ஐபிஎல் அணியின் உரிமையாளர் டெஸ்ட் போட்டிக்கு தனி பயிற்சியாளர் நியமிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அவருக்கும் கிரிக்கெட்டுக்கும் சம்பந்தமே கிடையாது. அவர் அப்படி சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்களது எல்லைக்குள் இருப்பது அவசியம்.
December 07, 2025 3:09 PM IST


