Last Updated:
இண்டிகோ ஏர்லைன்ஸ் சேவை முடக்கம் குறித்து தலைமை செயல் அதிகாரிக்கு மத்திய விமான போக்குவரத்து ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பி 24 மணி நேரத்தில் விளக்கம் கோரியுள்ளது.
இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவை நாடு முழுவதும் முடங்கியுள்ள நிலையில் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவை நாடு முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், விமான நிலையங்களில் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் உருவானது. இந்நிலையில் இண்டிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு விளக்கம் கேட்டு மத்திய விமான போக்குவரத்து ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில் நாடு முழுவதும் விமான சேவைகள் முடங்க தலைமை செயல் அதிகாரியான தங்களது பொறுப்பற்ற நடவடிக்கைகளே காரணம் என்றும் இந்த விவகாரம் தொடர்பாக விமான போக்குவரத்து ஆணையரகம் நடத்திய விசாரணையில் , இண்டிகோ நிறுவனத்தின் திட்டமிடல், மனிதவள மேலாண்மை போன்றவற்றில் ஏற்பட்ட நடைமுறை தோல்விகளால் தான் விமான சேவை பாதிக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
பல மணி நேரம் விமான நிலையத்தில் காத்துக்கிடக்கும் பயணிகளுக்கு அடிப்படை மாற்று ஏற்பாடு வசதிகளை கூட இண்டிகோ நிறுவனம் செய்து தரவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ள விமான போக்குவரத்து ஆணையரகம். இப்பிரச்சனைகளுக்கு எல்லாம் தங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என வினவியுள்ளது. 24 மணி நேரத்தில் விளக்கமளிக்க வேண்டும் என்று இண்டிகோ நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
December 07, 2025 8:21 AM IST


