Last Updated:
டெங்கு பாதிப்பால் தற்போது அதிகரித்து வரும் மாவட்டங்களில் மருத்துவ முகாம் கூடுதலாக நடத்த தமிழக பொது சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கடலூர் எம்.பி. விஷ்ணுபிரசாத், நடந்து வரும் மக்களவையின் குளிர்கால கூட்டத்தொடரில் டெங்கு பாதிப்பு தொடர்பான கேள்விகளை கேட்டுள்ளார். அதற்கு சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனுபிரியா பட்டேல், எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில் இணை அமைச்சர், “கடந்த வருடம் (2024-ம் ஆண்டு) ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் காலகட்டங்களில் மொத்தம் 1 லட்சத்து 61 ஆயிரத்து 885 என்று டெங்கு பாதிப்பு இருந்தது. தற்போது இதே காலகட்டத்தில் 75,534 என்று இந்த பாதிப்பு குறைந்துள்ளது. இறப்பு விகிதமும் இந்த காலகட்டத்தில் குறைந்துள்ளது” என்றுள்ளார்.

முன்னதாக கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழையால் சென்னை, கோவை, தஞ்சாவூர், கடலூர், மதுரை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.
December 06, 2025 11:48 AM IST


