பல்வேறு அரச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய அனர்த்த நிலையை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இதன்படி, சுகாதார ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
விடுமுறை இரத்து
அனைத்து சுகாதார ஊழியர்களும் நோயாளி பராமரிப்புக்கு இடையூறு ஏற்படாத வகையில் தங்கள் விடுமுறையை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், காவல்துறை அதிகாரிகளுக்கான விடுமுறை இரத்து செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

