தொழிலார்களுக்கு சமூக பாதுக்காப்பு கிடைக்க வேண்டுமென்றால் முதலில் தொழிலாளர் பற்றிய தரவுகள் அரசுக்கு கிடைக்க வேண்டும். இதற்கு, ஆதார் அடிப்டையிலான சரிபார்ப்பு இணையதளத்தை அரசு உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த புதிய விதிக்குள் வரும் அனைத்தும் தொழிலாளர்களும், நிறுவனங்களும் இந்த இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்திட வேண்டும். முறைசாரா தொழிலாளர், ஒப்பந்த தொழிலாளர் நடைபாதை தொழிலாளர், சுய தொழில் செய்வோர், வேளைக்கு செல்லாதோர் என அனைவருமே இந்த இணையதளத்தில் சில குறிப்பிட்ட விவரங்களை சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆதார் போன்ற அடையாள எண் ஒவ்வொரு தனிநபருக்கும் வழங்கப்படும். அப்போது, தான் சமூக பாதுகாப்பு கிடைக்கும். இவ்வளவு ஏன், இந்த இணையதளத்தில் பதிவு செய்யாதவர்களை யாரும் வேலைக்கு பணிக்கு நியமிக்க கூடாது. முறைசாரா துறையில் உள்ள ‘தள்ளுவண்டி கடைக்காரர்’ முதல் ‘வீட்டு வேலைக்குச் செல்பவர்கள்’ வரை அனைவரும் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதும், அடிக்கடி வேலை மாறும் தினக்கூலித் தொழிலாளர்கள் இந்த விதிமுறைகளுக்கு இணங்குவதும் மிகப்பெரிய சவாலாகும். மேலும், வீட்டு வேலைக்கு ஆட்களை அமர்த்தும் ஒவ்வொரு வீட்டையும் ஒரு முதலாளியாகப் பதிவு செய்வது நடைமுறையில் சாத்தியமற்றது என்ற கருத்தும் உள்ளது.


