புக்கிட் திமா சாலைக்கு அருகே நடந்து வரும் கட்டுமானப் பணியின்போது, பூமிக்கு அடியில் இருந்து கல்லறை நடுகல் இல்லாத நான்கு சவப்பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
கே.கே. பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு (KKH) பின்னால் இந்த கட்டுமான பணி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் இந்திய ஓட்டுநர் செய்த தவறு… அபராதம், வாகனம் ஓட்டத் தடை
இந்த அறிவிப்பை நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) பகிர்ந்து கொண்டுள்ளது.
நான்கு சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு
அந்த அறிவிப்பில், நெருங்கிய உறவினர்கள் அல்லது வழித்தோன்றல்கள் தங்களை தொடர்புகொள்ளலாம் என்றும், அது தொடர்பான தகவல்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் LTA தெரிவித்துள்ளது.
மேலும் அறிவிப்பு வெளியான 14 நாட்களுக்குள் யாரும் அதனை உரிமைகோரவில்லை என்றால், விதிமுறைகளின்படி அடுத்த நகர்வை மேற்கொள்வோம் என்றும் LTA தெரிவித்துள்ளது.
இது குறித்து காவல்துறையிலும் புகார் அளித்துள்ளதாக LTA தெரிவித்துள்ளது.
The post கட்டுமானப் பணியின்போது கண்டெடுக்கப்பட்ட 4 சவப்பெட்டிகள்: உறவினர்கள் தொடர்புகொள்ளலாம் – LTA அறிவிப்பு appeared first on Tamil Daily Singapore.

