இழந்த சாமான்களைக் கண்டுபிடிக்க புதிய முயற்சி: உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றை இயக்கும் இந்திய ரயில்வே, ரயில் மடாட் (Rail Madad) எனப்படும் மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் குறைதீர்க்கும் தளத்தை உருவாக்கியுள்ளது. இந்த 24×7 ஆன்லைன் சேவை, பயணிகள் தங்களது தவறவிட்ட பொருட்கள் குறித்து உடனடியாக புகாரளிக்க உதவுகிறது. அதிகாரிகளின் கூற்றுப்படி, ரயில் மடாட் தற்போது ரயில்களில் காணாமல்போன பொருட்களைப் பதிவு செய்து, மீட்டெடுப்பதற்கான மிகவும் பயனுள்ள மற்றும் விரைவான வழியாகத் தெரிகிறது. பயணிகள் எப்படி புகாரளிக்கலாம் என்பது தொடர்பாக பார்க்கலாம்.


