சிங்கப்பூரில் இந்திய ஓட்டுநர் செய்த தவறுக்காக அவருக்கு S$8,000 அபராதம் விதிக்கப்பட்டது.
லாரியின் உயர எச்சரிக்கை கருவியை முடக்கி, மேம்பாலத்தில் மோதிய காரணத்துக்காக அவருக்கு ஆறு மாதங்களுக்கு வாகனம் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டது.
TTK சர்வீசஸ் நிறுவனத்தின் ஊழியரான ஓட்டுநர் குருசாமி நாகராஜன், கடந்த ஜூன் 27 அன்று மரக்கிளைகளை ஏற்றிச் சென்றபோது இந்த சம்பவம் நடந்தது.
லாரியில் கிரேன் சரியாக பொருத்தப்படாமல் இருந்ததாகவும், மேலும் ஒலித்துக் கொண்டிருந்த உயர எச்சரிக்கை கருவியை அவர் முடக்கிவிட்டு வாகனம் ஓட்டத் தொடங்கினார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
இதனால், தோ பாயோ நார்த் மேம்பாலத்தின் அடிப்பகுதியில் லாரி மோதியது.
இந்நிலையில், குற்றத்தை ஒப்புக்கொண்டதன் காரணமாக குருசாமிக்கு அபராதம் மற்றும் வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் இனி இந்த வகை வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒர்க் பெர்மிட் அனுமதி கிடையாது – MOM அதிரடி

