Last Updated:
விஜய் தலைமையிலான தவெ.க, 9ஆம் தேதி உப்பளம் துறைமுக மைதானத்தில் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு, கண்காணிப்பாளர் கலைவாணனிடம் கடிதம் வழங்கியது.
புதுச்சேரியில் தவெக தலைவர் விஜயின் ரோட் ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி அக்கட்சியினர் கடிதம் அளித்துள்ளனர்.
அடுத்தாண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் பிரசாரம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால், கரூரில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து தனது பிரசார பயணத்தை விஜய் ஒத்திவைத்திருந்தார். பின்னர், ஒரு மாத காலத்திற்கு பிறகு, விஜய் காஞ்சிபுரம் மக்களை உள்ளரங்கத்தில் அழைத்து வந்து சந்தித்தார்.
இந்நிலையில், புதுச்சேரியில் வரும் டிச.5ம் தேதி விஜயின் ரோடு ஷோ நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், புதுச்சேரியில் விஜயின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், புதுச்சேரி வந்து காவல்துறை அதிகாரிகளையும் முதல்வரையும் சந்தித்து அனுமதி கோரியிருந்தார். இருப்பினும், அனுமதி மறுக்கப்பட்டது. முதல்வர் சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த புஸ்ஸி ஆனந்த், இதுதொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை.
December 04, 2025 3:30 PM IST


