சிங்கப்பூரில் இனி பொழுதுபோக்குக் கலைஞர்களுக்காக வழங்கப்படும் ஒர்க் பெர்மிட் (Work permit) அனுமதி கிடையாது என்று மனிதவள அமைச்சகம் (MOM) கூறியுள்ளது.
இந்த வேலை அனுமதி சீட்டு பரவலாக தவறாக பயன்படுத்துவது MOM மற்றும் காவல்துறை நடத்திய சமீபத்திய சோதனை நடவடிக்கைகளில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, ஜூன் 1, 2026 முதல் பொழுதுபோக்குக் கலைஞர்களுக்காக (Artiste Work Permit) புதிய வேலை அனுமதி விண்ணப்பங்கள் நிறுத்தப்படும் என MOM திட்டவட்டமாக கூறியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் வேலைக்கு எடுக்கப்பட்ட வெளிநாட்டு கலைஞர்கள் அவர்களுக்குரிய வேலையை பார்க்காமல் வேறு இடங்களில் வேலை செய்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதனால் இந்தத் திட்டத்தை நிறுத்துவதாக MOM செய்திக்குறிப்பில் தெரிவித்தது.
தற்போது அந்த அனுமதியின்கீழ் வேலையில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள், அவர்களின் அனுமதிச் சீட்டுகள் காலாவதியாகும் வரை அல்லது ரத்து செய்யப்படும் வரை வேலையில் இருக்க முடியும்.
2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம், ஹோட்டல்கள், மதுமான விடுதிகள் மற்றும் இரவு விடுதிகள் போன்ற உரிமம் பெற்ற பொது பொழுதுபோக்கு நிலையங்களில், வெளிநாட்டு கலைஞர்கள் ஆறு மாதங்கள் வரை வேலை செய்ய அனுமதிக்கப்பட்டது.
இந்தியா உட்பட அனைத்து நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் வேலை அனுமதி வழங்கப்பட்டது.
2026ல் “ஊழியர்களுக்கு வேலை இல்லை.. சம்பளம் உயராது” – பெரும்பாலான முதலாளிகளின் கருத்து

