Last Updated:
சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் என்ற உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து மொபைல் போன்களிலும் “சஞ்சார் சாத்தி” செயலி கட்டாயம் என்ற உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றது. சைபர் பாதுகாப்பிற்காக அனைத்து செல்போன்களிலும் “சஞ்சார் சாத்தி” என்ற செயலியை கட்டாயம் நிறுவ வேண்டும் என்று இந்தியாவில் உள்ள செல்போன் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இது, தனியுரிமைக்கு எதிரானது என்று எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்திலும் குரல் எழுப்பினர்.

இந்நிலையில் “சஞ்சார் சாத்தி” செயலி கட்டாயம் என்ற உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், இதுவரை ஒரு கோடியே 40 லட்சம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, நாளொன்றுக்கு 2 ஆயிரம் சைபர் குற்றங்கள் தொடர்பான தகவல்களை கொடுத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக, ஒரே நாளில் 6 லட்சம் பேர் ‘சஞ்சார் சாத்தி’ செயலியை பதிவிறக்கம் செய்திருப்பது, மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்பட்டு இருப்பதை காட்டுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. எனவே, சஞ்சார் சாத்தி செயலியை மக்களே ஏற்றுக் கொண்டதால், அதனை கட்டாயமாக்க வேண்டிய தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
December 04, 2025 6:55 AM IST


