Last Updated:
ரயில் தண்டவாளம் அருகே திடீரென்று பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பதைப் பார்த்த பயணிகள், ரயில் நிலையத்திலிருந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
தெலங்கானா மாநிலம் பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டம் கொத்தகூடம் ரயில் நிலையத்தில் தண்டவாளம் அருகே நாட்டு வெடிகுண்டுடன் கூடிய பை ஒன்று கிடந்தநிலையில், அந்தப் பையை கடித்த தெரு நாய் ஒன்று, குண்டு வெடித்து இறந்து போனது.
ரயில் தண்டவாளம் அருகே திடீரென்று பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பதைப் பார்த்த பயணிகள், ரயில் நிலையத்திலிருந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ரயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மேலும் ஒரு பை நாட்டு வெடிகுண்டுகளுடன் அங்கு கிடைப்பதைப் பார்த்த போலீசார் அந்த பையைத் திறந்து அதிலிருந்த நான்கு நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் ரயில் நிலையத்திற்கு நாட்டு வெடிகுண்டுகளை கொண்டுவந்தது யார்? அவற்றை ரயில் தண்டவாளம் அருகே விட்டுச் செல்ல வேண்டிய காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதி பத்திராத்திரி கொத்தகூடம் மாவட்டம் என்பதால் நக்சலைட்டுகள் ரயில் மூலம் நாட்டு வெடிகுண்டுகளை எடுத்துச் செல்ல முயன்று போலீஸ் சோதனைக்கு பயந்து, விட்டு சென்றுவிட்டார்களா என்று கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.
December 03, 2025 10:14 PM IST


