நிறுவனம் CTC தொகையை அதேபடி வைத்துக் கொண்டால், basic pay அதிகரிக்க வேண்டியதால் EPF மற்றும் gratuity கணக்கீடு செய்யப்படும் தொகையும் அதிகரிக்கும். PF கணக்கீட்டில் basic pay உயர்ந்தால், ஊழியர் மற்றும் நிறுவனத்தினரின் பங்களிப்பும் அதிகரிக்கும். இதனால் ஊழியரின் எதிர்கால சேமிப்பு, குறிப்பாக PF தொகை மற்றும் gratuity இரண்டும் உயர்ந்தாலும், ஒவ்வொரு மாதமும் கைக்கு கிடைக்கும் actual salary குறைவது தவிர்க்க முடியாததாகிறது. இன்று பல ஊழியர்கள் பெறும் உயர்ந்த in-hand salary, allowances அதிகமாக இருப்பதாலே சாத்தியமாகிறது. ஆனால் 2025 Labour Code நடைமுறைக்கு வந்தவுடன் allowances விகிதம் குறைந்து, basic pay உயர்த்தப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது.


