Last Updated:
இந்தோனேஷியாவில் மழை வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 700ஐ கடந்துள்ளது.
இந்தோனேஷியாவில் மழை வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 700ஐ கடந்துள்ளது.
இந்தோனேஷியாவில் வடக்கு மற்றும் மேற்கு சுமத்ரா தீவிர பருவமழை மற்றும் புயல் காரணமாக வரலாறு காணாத அளவில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் வடக்கு சுமத்ராவில் தபனுலி தெங்கா (Tapanuli Tengah), அகம் (Agam), ஆசே (Aceh) உள்ளிட்ட பகுதிகள் நீரில் மூழ்கின. கனமழை பெருவெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 740க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மாயமான 500க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் மீட்பு படைகள் ஈடுபட்டுள்ளன.
வெள்ளத்தில் உயிரிழந்த கால்நடைகள் குடியிருப்புப் பகுதிகளில் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் 32 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
December 03, 2025 5:00 PM IST


