Last Updated:
Personal Loan | வட்டி விகிதங்கள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருப்பதால், நீங்கள் பர்சனல் லோனுக்கு விண்ணப்பிக்கும் முன்பு சமீபத்திய வட்டி விகிதம் என்ன என்பதை சரிபார்ப்பது எப்போதும் சிறந்தது.
நீங்கள் விரைவில் தனிநபர் கடன் வாங்க திட்டமிட்டிருந்தால், அதற்கான வட்டி விகிதங்களை ஒப்பிடுவது உங்கள் ஒட்டுமொத்த செலவில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும். இன்னும் சொல்லப்போனால், வட்டி விகிதங்களில் காணப்படும் சிறிய மாற்றம்கூட காலப்போக்கில் உங்களுக்கு ஒரு கணிசமான தொகையை மிச்சப்படுத்த உதவும்.
வட்டி விகிதங்கள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருப்பதால், நீங்கள் பர்சனல் லோனுக்கு விண்ணப்பிக்கும் முன்பு சமீபத்திய வட்டி விகிதம் என்ன என்பதை சரிபார்ப்பது எப்போதும் சிறந்தது. அந்த வகையில் டிசம்பர் 2025-ல் இந்தியாவின் ஐந்து பெரிய வங்கிகள் தனிநபர் கடனை என்ன வட்டி விகிதத்தில் வழங்குகின்றன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்…
ஐசிஐசிஐ வங்கியின் தனிநபர் கடன் விகிதங்கள் 10.45% முதல் 16.50% வரை உள்ளன. ப்ராசஸிங் சார்ஜ் 2% ஆகும். எனினும், தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் நபரின் வருமானம், கிரெடிட் ப்ரொஃபைல் மற்றும் கடன் தொகையைப் பொறுத்து இறுதி வட்டி விகிதம் மாறுபடும்.
HDFC வங்கியானது தற்போது மாதாந்திர சம்பளம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 9.99% முதல் 24% வரையிலான வட்டி விகிதத்தில் தனிநபர் கடன்களை வழங்குகிறது. மேலும், இந்த வங்கி ரூ.6,500 ப்ராசஸிங் சார்ஜூடன், ஜிஎஸ்டியை-யும் சேர்த்து வசூலிக்கிறது.
கோடக் மஹிந்திரா வங்கியானது 10.99% மற்றும் அதற்கு மேலான வட்டி விகிதத்தில் தனிநபர் கடன்களை வழங்குகிறது. தனிநபர் கடனுக்கான ப்ராசஸிங் சார்ஜாக இந்த வங்கிக் கடன் தொகையில் 5% வரை வசூலிக்கலாம், இந்த தொகை கடன் வழங்கும்போது கழிக்கப்படும்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) தொடர்ந்து அதன் வட்டி விகிதங்களை நிலையாக வைத்திருக்கிறது. இது தனிநபர் கடனுக்கு 10.05% முதல் 15.05% வரை வட்டி வசூலிக்கிறது, இது பல தனிநபர் கடன் வாங்க நினைக்கும் மாதாந்திர ஊதியதாரர்களுக்கு விருப்பமான தேர்வாக அமைகிறது.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 10.75% முதல் 14.45% வரையிலான வட்டி விகிதங்களில் தனிநபர் கடன்களை வழங்குகிறது, இது கடன் வாங்குபவர்களுக்கு மற்றொரு நம்பகமான பொதுத்துறை வங்கியாக இருக்கிறது.
எந்த கடனாக இருந்தாலும் வங்கிகளுக்கு இடையே வட்டி விகிதங்கள் பரவலாக மாறுபடுவதால், கடன் வாங்குபவர்கள் கடன் காலம் முழுவதும் கணிசமான தொகையைச் சேமிக்க உதவ பொறுமையாக ஒப்பிட்டு பார்ப்பது உதவும். வட்டி விகிதத்துடன், விண்ணப்பதாரர்கள் செயலாக்கக் கட்டணங்கள் மற்றும் திருப்பிச் செலுத்தும் நெகிழ்வுத் தன்மையையும் எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டும். கடன் வாங்க ஒட்டுமொத்தமாக எந்த வங்கி சிறந்தது என்பதை ஒப்பிட்டுப் பார்க்க அவகாசம் எடுத்துக் கொள்வது, செலவு குறைந்த கடனைப் பெற வழிவகுக்கும்.
December 03, 2025 3:48 PM IST
Personal Loan | இந்தியாவின் 5 பெரிய வங்கிகள் என்ன வட்டி விகிதத்தில் தனிநபர் கடன் வழங்குகின்றன…? விவரங்கள் இதோ…!


