சிங்கப்பூரில் 2026ஆம் ஆண்டை பொறுத்தவரை ஊழியர்களை வேலைக்கு எடுப்பதை நிறுத்துவதாக ஐந்தில் மூன்று முதலாளிகள் கூறியுள்ளனர்.
நிலையில்லாத வர்த்தக சூழ்நிலைகள் காரணமாக முதலாளிகள் அவ்வாறு முடிவு எடுத்துள்ளதாக சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு (SNEF) நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்தது.
ஒர்க் பெர்மிட் அனுமதி பெற்ற இந்தியர்.. ICA அதிகாரியின் முன் தகாத செயல் – சிறையில் அடைத்த நீதிமன்றம்
ஜூன் 25 முதல் ஆகஸ்ட் 15 வரை நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பில், சுமார் 240 முதலாளிகள் பங்குகொண்டு பதிலளித்தனர்.
இந்த ஆண்டு 72 சதவீத முதலாளிகள் நிச்சயமற்ற நிலையில்லாத வர்த்தக சூழ்நிலைகளை எதிர்கொண்டனர், இது 2024 இல் 58 சதவீதமாக இருந்தது.
அதே போல 2025/2026 நிதியாண்டில், கிட்டத்தட்ட பாதி (48 சதவீதம்) முதலாளிகள் சம்பளத்தில் நடுநிலைப் பேணப்போவதாகவும் அல்லது சம்பள உயர்வு இல்லை என்றும் கூறியுள்ளனர்.
இது கடந்த ஆண்டு புள்ளிவிவரத்தை ஆண்டை விட 10 சதவீதம் அதிகமாகும்.
கடந்த ஆண்டைப் போலவே, அதிகரித்து வரும் மனிதவளச் செலவுகள் அடுத்த ஆண்டும் முதலாளிகளுக்கு முக்கிய மனிதவளச் சவாலாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிக திறன் கொண்ட நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை ஈர்ப்பது மற்றும் தக்கவைத்துக்கொள்வது முதலாளிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. மேலும் அதிக திறமையான, உள்ளூர் ஊழியர்களின் பற்றாக்குறையும் அதில் அடங்கும்.
இந்தச் சவால்களைச் சமாளிக்க, 62 சதவீத முதலாளிகள் அதிக சம்பளம் மற்றும் சலுகைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளனர், இது 2024 இல் 70 சதவீதத்திலிருந்து குறைவாகும்.
போக்குவரத்து அபராதத்தை விரைந்து செலுத்தினால் இனி தள்ளுபடி – புதிய நடைமுறை எப்படி செயல்படுகிறது?

