யாழ்ப்பாண மாவட்டத்திற்குத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் மற்றும் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எரிவாயு
இந்தநிலையில், யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் (02) 3,729 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் எடுத்துவரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவித்த அவர், நாளை (03) 1,716 சிலிண்டர்களும் மற்றும் நாளை மறுதினம் (04) 2,217 சிலிண்டர்களும் யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்படவுள்ளதாகத் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், கட்டம் கட்டமாகத் தொடர்ச்சியாக எரிவாயு சிலிண்டர்களைக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

