Last Updated:
கடந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்
இந்திய கிரிக்கெட் அணி நாளை ராய்ப்பூரில் நடைபெற உள்ள தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. முன்னதாக ராஞ்சி நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் நாளைய போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை வென்று விடும்.
நாளை இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணி அளவில் தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி தொடர் மற்றும் 5 டி20 போட்டி தொடரில் விளையாடுகிறது. வெற்றில் டெஸ்ட் தொடர் நிறைவு பெற்றது.
இதில் தென் ஆப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக வென்றது. அதைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது என்று எதிர்பார்க்கலாம்.
காயம் காரணமாக இந்திய அணியின் கேப்டன் சுப்மான் கில் ஓய்வில் உள்ள நிலையில் அவருக்கு பதிலாக கே.எல். ராகுல் அணியை வழிநடத்தி வருகிறார்.
கடந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருப்பினும் தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணிக்கு போட்டி கொடுக்கும் வகையில் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. 17 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றதால் நாளைய போட்டியில் கூடுதல் கவனத்துடன் இந்தியா களம் இறங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
December 02, 2025 10:18 PM IST


