Last Updated:
காசி தமிழ் சங்கமம் 4.0 காசியில் தொடங்கியது. பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். ஆளுநர் ஆர்.என். ரவி, தர்மேந்திர பிரதான், எல்.முருகன், யோகி ஆதித்யநாத் பங்கேற்றனர்.
‘தமிழ் கற்கலாம்’ என்ற கருப்பொருளுடன் காசியில் தமிழ்ச் சங்கமம் தொடங்கியுள்ள நிலையில், ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ உணர்வை பிரதிபலிக்கும் நிகழ்ச்சி எனக் குறிப்பிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான தொடர்பை கொண்டாடும் வகையில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஆண்டுதோறும் மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டு ‘காசி தமிழ் சங்கமம் 4.0’ இன்று தொடங்கியது. ‘தமிழ் கற்கலாம்’ என்ற கருப்பொருள் கொண்ட இந்த நிகழ்ச்சியில் வரும் 15ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் இருந்து காசிக்கு சென்ற ஏழு குழுக்கள், காசியின் பெருமையையும், தமிழ்நாட்டுடனான தொடர்பையும் அறிந்து கொள்ள இருக்கின்றனர்.
இரண்டாவது கட்டமாக வரும் 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் நிகழ்வில், வாரணாசியில் இருந்து 300 மாணவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து தமிழ் பண்பாடு, கலாசாரம், நாகரிக தொடர்பு போன்றவற்றை அறிந்து கொள்ள இருக்கின்றனர்.
காசி தமிழ் சங்கமம் இன்று தொடங்கியுள்ள நிலையில், ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வை ஆழப்படுத்தும் இந்த சிறப்பான நிகழ்ச்சிக்கு எனது நல்வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன். காசியில் மகிழ்ச்சியோடும், பசுமையான நினைவுகளோடும் சங்கமம் நிகழ்ச்சிக்கு வருகை தருகின்ற அனைவருக்கும்… https://t.co/KpxREQX4rw
— Narendra Modi (@narendramodi) December 2, 2025
இதன் தொடக்க விழாவில் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், எல்.முருகன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வை ஆழப்படுத்தும் இந்த சிறப்பான நிகழ்ச்சிக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காசியில் மகிழ்ச்சியோடும், பசுமையான நினைவுகளோடும் சங்கமம் நிகழ்ச்சிக்கு வருகை தரும் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றும் பதிவிட்டுள்ளார்.
#WATCH | Varanasi, UP: Tamil Nadu Governor R.N. Ravi, Union Minister Dharmendra Pradhan and UP CM Yogi Adityanath attend ‘Kashi Tamil Sangamam 4.0’.
Tamil Nadu Governor R.N. Ravi says, “PM Modi has Tamil Nadu and its people in his heart… Every year, this Kashi Tamil Sangamam… pic.twitter.com/NV5CYyMlpN
— ANI (@ANI) December 2, 2025
நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, “தமிழ்நாட்டையும், அதன் மக்களையும் பிரதமர் நரேந்திர மோடி தனது இதயத்தில் வைத்திருக்கிறார். ஒவ்வொரு வருடமும் காசி தமிழ்ச் சங்கமம் ஒரு இலக்கை கொண்டுள்ளது. பிரதமர் மோடி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதி இருக்கையை நிறுவினார். இங்கு தமிழ் டிப்ளமோ படிப்பு வழங்கப்படுகிறது” என பேசினார்.
December 02, 2025 10:13 PM IST
“தமிழ்நாட்டை பிரதமர் தனது இதயத்தில் வைத்திருக்கிறார்” – காசி தமிழ் சங்கமத்தில் ஆளுநர் பேச்சு


