டிட்வா புயலால் பயிர்கள் அழிவடைந்ததைத் தொடர்ந்து மரக்கறி விலைகள் எதிர்பாராதளவுக்கு உயர்ந்துள்ளன. விநியோகமில்லாத நிலையில் உள்ளூர் கடைக்காரர்கள் விலைகளை உயர்த்தியுள்ளனர்.
சமூகவலைத்தளங்களில் உலவும் காணொளியின்படி சில கடைகளில் பச்சை மிளகாய் கிலோ 3,000 ரூபாய்க்கும், கரட்டும், லீக்ஸும் கிலோ 2,800 ரூபாய்க்கும் கத்தரிக்காய் 800 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.
இதேவேளை பல்பொருள் அங்காடிகளிலும், பலசரக்குக் கடைகளிலும் சாமான்களை தொடர்ந்து மக்கள் வாங்கி வருகையில் பொருட்களின் விலைகள் இன்னும் உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.

