Last Updated:
தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவுடன் ரஷ்யா துணை நிற்கும் என ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார் கூறி உள்ளார்.
ரஷ்ய அதிபர் புதின் வருகையின் போது, இந்தியா-ரஷ்யா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கான வாய்ப்பிருப்பதாக ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் புதின் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக வரும் 4-ஆம் தேதி இந்தியா வரவுள்ளார். அப்போது, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்ட S-400 ஏவுகணை தடுப்பு அமைப்பை இந்தியாவிடம் விற்பனை செய்வது குறித்து புதின் பேச்சு நடத்துவார் என ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவத்தில் 36 சதவீத ஆயுதங்கள் ரஷ்ய தயாரிப்பு என குறிப்பிட்ட அவர், ஐந்தாவது தலைமுறை Su-57 போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வது குறித்தும், Su-57 ரக விமானங்களை இந்தியாவிலேயே தயாரிப்பது குறித்தும் விவாதிக்க வாய்ப்புள்ளதாகவும், கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும், அதை தொடர விரும்புவதாகவும் குறிப்பிட்ட பெஸ்கோவ், இந்தியா-ரஷ்யா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த டிமிட்ரி பெஸ்கோவ், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவுடன் ரஷ்யா துணை நிற்கும் என கூறினார்.
December 02, 2025 5:47 PM IST
இந்தியாவுடன் கையெழுத்தாகிறது அணுசக்தி ஒப்பந்தம்? வெளியானது ரஷ்யாவின் முக்கிய அறிவிப்பு!


