ஏனெனில், இந்த ஆவணம் ஓய்வூதியதாரர் இன்னும் உயிருடன் இருப்பதை நிரூபிக்க சமர்ப்பிக்கப்படுகிறது. முன்னதாக, லைஃப் சர்டிஃபிகேட்டை வங்கி அல்லது ஓய்வூதிய அலுவலகத்திற்கு நேரில் சென்று சமர்ப்பித்தனர். ஆனால், இப்போது அதை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கலாம்.
டிஜிட்டல் லைஃப் சர்டிஃபிகேட்டை சமர்ப்பிக்க கடைசி நாள் நெருங்கி வருவதால், நாடு முழுவதும் உள்ள ஓய்வூதியதாரர்கள் தடையற்ற ஓய்வூதியம் பெறுவதற்கான ஆதார் அடிப்படையிலான டிஜிட்டல் லைஃப் சர்டிஃபிகேட்டை (DLC) ஜீவன் பிரமான் பத்திரத்தை சமர்ப்பிக்க விரைந்து வருகின்றனர். வங்கி, தபால் அலுவலகம் அல்லது அரசுத்துறை போன்ற ஓய்வூதியம் வழங்கும் நிறுவனம் (PDA) நீங்கள் சமர்ப்பித்த டிஜிட்டல் லைஃப் சர்டிஃபிகேட்டை ஏற்றுக்கொண்டதா அல்லது நிராகரித்ததா? என்பதை எப்படி தெரிந்து கொள்வது?
ஜீவன் பிரமான் பத்ரா என்பது ஆதார் அடிப்படையிலான டிஜிட்டல் சான்றிதழாகும். இது ஓய்வூதியதாரர்கள் தங்கள் அடையாளச் சான்றாகச் சமர்ப்பிக்கிறது. ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்திற்கு நேரில் செல்வதற்குப் பதிலாக, ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஆதார் எண் மற்றும் ஃபிங்கர்பிரின்ட் அல்லது ஐரிஸ் ஆதென்டிகேஷனைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தே டிஜிட்டல் லைஃப் சர்டிஃபிகேட்டை உருவாக்கலாம்.
ஒவ்வொரு சான்றிதழுக்கும் ஒரு தனித்துவமான சான்றிதழ் ஐடி வழங்கப்படுகிறது, இது ஓய்வூதியம் வழங்கும் நிறுவனத்தால் ஓய்வூதியத்தைத் தொடர அங்கீகரிக்கப் பயன்படுகிறது. இது வயதான ஓய்வூதியதாரர்கள் அல்லது அவர்களின் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்திலிருந்து வெகு தொலைவில் வசிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
1: 5MP முன் கேமரா மற்றும் இன்டர்நெட் அக்சஸ் கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மூலம் இதை செய்யலாம்.
2: PDA-ல் பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண் மற்றும் ஆதார் எண்ணை தயாராக வைத்திருக்க வேண்டும்.
3: பிளே ஸ்டாரில் இருந்து AadhaarFaceRD ஆப் மற்றும் Jeevan Pramaan Face ஆப் -ஐ டவுன்லோடு செய்யவும்.
4: முழுமையான ஆபரேட்டர் அங்கீகாரம் (ஓய்வூதியம் பெறுவோர் ஆபரேட்டராக மாறலாம்).
5: ஓய்வூதியதாரர் விவரங்களை என்டர் செய்யவும்.
6: செல்ஃபியை தெளிவாக எடுத்து சப்மிட் செய்யவும்.
7: சப்மிட் செய்தவுடன், ஜீவன் பிரமான் சான்றிதழை டவுன்லோடு செய்வதற்கான லிங்க் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு SMS மூலம் அனுப்பப்படும்.
DLCஐ உருவாக்க, ஆதார் எண், பெயர் மற்றும் மொபைல் எண், PPO எண், ஓய்வூதிய கணக்கு எண் மற்றும் வங்கி விவரங்கள், ஓய்வூதிய ஒப்புதல் அதிகாரியின் பெயர், ஓய்வூதியம் வழங்கும் அதிகாரியின் பெயர் போன்ற விவரங்களை ஓய்வூதியதாரர்கள் வழங்க வேண்டும்.
1: அதிகாரப்பூர்வ போர்ட்டலைப் பார்வையிடவும்: https://jeevanpramaan.gov.in
2: உங்கள் பிரமான்-ஐடியைப் பயன்படுத்தி உங்கள் டிஜிட்டல் லைஃப் சர்டிஃபிகேட்டை டவுன்லோடு செய்யவும்.
3: சான்றிதழின் கீழே, PDA உங்கள் லைஃப் சர்டிஃபிகேட்டை ஏற்றுக்கொண்டதா அல்லது நிராகரித்ததா என்பதைக் குறிக்கும் ஒரு செய்தியும் இருக்கும்.
PDA உங்கள் லைஃப் சர்டிஃபிகேட் ஏற்றுக்கொண்டால், ஓய்வூதியம் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும். உங்கள் லைஃப் சர்டிஃபிகேட் நிராகரிக்கப்பட்டால், சான்றிதழில் அதற்கான அறிவிப்பு தெளிவாகக் காட்டப்படும். உங்கள் சர்டிஃபிகேட் நிராகரிக்கப்பட்டால், ஓய்வூதியத்தில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க, ஓய்வூதியதாரர்கள் சரியான விவரங்கள் மற்றும் புதிய பயோமெட்ரிக்ஸுடன் புதிய டிஜிட்டல் லைஃப் சர்டிஃபிகேட்டை சமர்ப்பிக்க வேண்டும்.
December 02, 2025 1:17 PM IST
உங்களோட டிஜிட்டல் லைஃப் சர்டிஃபிகேட் ஏற்றுக்கொள்ளப்பட்டதா…? ஓய்வூதியம் பெறுவோர் சரிபார்ப்பதற்கான வழிமுறை…

