Last Updated:
எலான் மஸ்க், ZERODHA நிகில் காமத்தின் பாட்காஸ்டில், திறமையான இந்தியர்கள் அமெரிக்கா வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பு செய்துள்ளனர் என பாராட்டு தெரிவித்தார்.
திறமை வாய்ந்த இந்தியர்களால் அமெரிக்கா பெரிதும் பலனடைந்திருப்பதாக டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜெரோதா (Zerodha) நிறுவனத்தின் இணை நிறுவனரான நிகில் காமத்தின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய எலான் மஸ்க், அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விரிவாகப் பேசினார். ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் எல்லைக் கட்டுப்பாடுகள் இல்லாமல் அனைவருக்கும் முழுமையான சுதந்திரம் அளிக்கப்பட்டதாகக் கூறினார். ஆனால் அது சட்டவிரோத குடியேற்றத்தை ஊக்குவித்தது போன்ற எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தியதாகவும் கவலை தெரிவித்தார். அதேநேரம் இந்த திட்டத்தை முழுமையாக கைவிடக் கூடாது என்று யோசனை தெரிவித்தார்.
அமெரிக்காவில் குடியேறும் வெளிநாட்டினர் உள்ளூர் மக்களின் வேலையை பறிப்பதாக எழுந்த விமர்சனத்திற்கு பதிலளித்த எலான் மஸ்க், திறமையானவர்களுக்கு எப்போதும் பற்றாக்குறை இருப்பதாகக் கூறினார். இங்கு வந்த திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பெரிதும் பலனடைந்திருப்பதாகவும், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு இந்தியர்கள் பெரும் பங்களிப்பு வழங்கியிருப்பதாகவும் பாராட்டு தெரிவித்தார்.
ஒரு நிறுவனத்தை உருவாக்க விரும்பினால் கடினமாக உழைக்க வேண்டும் என்றும் தோல்விக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் எலான் மஸ்க் அறிவுறுத்தினார்.
December 01, 2025 8:35 PM IST


