மத்திய மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் சடலங்கள் நிரம்பியுள்ளன, மின் தடை காரணமாக, உடல்கள் மோசமடையாமல் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.
இந்த நேரத்தில், விசாரணைகளுக்காக மரண விசாரணை அதிகாரிகளைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
களத்தில் காவல்துறை மற்றும் முப்படையினர்
வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு காவல்துறை உட்பட முப்படைகளும் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட மாகாணங்களில் ஏராளமான காவல் நிலையங்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நடக்கும் காவல்துறை அதிகாரிகள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அகதிகளுக்கும் உதவ ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் மூத்த மற்றும் இளைய காவல்துறை அதிகாரிகள் மூன்று முதல் நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்வார்கள் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் வுட்லர் தெரிவித்தார்.

மத்திய மாகாணம் என்பது கண்டியை தலைமையிடமாக கொண்டது.இது மாத்தளை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது
இந்த மாவட்டங்களிலிலேயே தற்போதைய இயற்கை பேரிடரால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

