வெளிநாட்டு ஊழியர்களின் தியாகத்தை போற்றி அவர்களை அங்கீகரிக்கும் வகையில் சிங்கப்பூரில் சர்வதேச குடியேறிகள் தினம் (International Migrants Day) கொண்டாடப்பட்டது.
சுமார் 300 வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்கள் மேலும் சிங்கப்பூரர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
வேற லெவெலுக்கு மாறவுள்ள “வெளிநாட்டு ஊழியர்களின் தங்கும் விடுதிகள்” – சிறப்பு வசதிகள் Upgrade
இந்நிகழ்வில் மூலம் புதிய புதிய நட்பு வட்டங்களும் மேலும் சிறந்த அனுபவமும் கிடைத்ததாக கலந்துகொண்ட வெளிநாட்டு ஊழியர்களும் சிங்கப்பூரர்களும் தெரிவித்தனர்.
மேலும் ஒருவருடைய கலாச்சார பழக்க வழக்கங்களை இன்னொருவர் புரிந்துகொள்ள ஏதுவாக இந்த நிகழ்ச்சி அமைந்தது என கூறப்பட்டுள்ளது.
முக்கியமாக சிங்கப்பூர் மக்களையும் வெளிநாட்டு ஊழியர்களையும் ஒன்றாக இணைக்கும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் அங்கு இடம்பெற்றன.
இந்த கொண்டாட்டம் இதோடு முடிவு பெறாமல், ஒரு மாத காலம் வெவ்வேறு அம்சங்களுடன் நடைபெற ஏற்பாடு செய்துள்ளதாக MOM இன் ACE குழுமம் ஏற்பாடு செய்துள்ளது.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் அதிரடி சோதனை: 12 ஊழியர்கள் கைது – 3 பேருக்கு அபராதம்
Photo: ACE Group/Facebook

