Last Updated:
இந்திய போர்க்கப்பல் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன
diடிட்வா புயலால் இலங்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதற்காக அவசர உதவி மையங்கள் இந்திய தூதரகத்தால் தலைநகர் கொழும்பில் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
டிட்வா புயலின் கடும் சீற்றம் காரணமாக விமான இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் என்ன செய்வது அறியாது இந்திய பயணிகள் தவித்து வந்த நிலையில், அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட தேவைகளை இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வழங்கி வருகிறது.
இதற்கிடையே டிட்வா புயலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக சர்வதேச நாடுகளின் உதவியை இலங்கை அரசு நாடி இருக்கிறது. கடுமையாக வீசிய புயல் காரணமாக 15 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சுமார் 44 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். நேற்று இந்திய விமானப்படை தரப்பில் 20 டன்னுக்கும் அதிகமான உதவிப் பொருட்கள் தேசிய பேரிடர் மீட்புப் படைக்கு வழங்கியுள்ளது. இதேபோன்று இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். பு
புயல் பாதிப்பு ஏற்பட்ட உடனேயே இந்தியா தான் முதல் நாடாக தனது உதவிக்கரத்தை நீட்டியது. உடனடியாக 2 விமானங்களில் இலங்கைக்கு தேவையான உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் இந்திய போர்க்கப்பல் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
November 30, 2025 11:57 AM IST
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளும் இந்திய தூதரகம்..


