Last Updated:
இது போன்ற சம்பவம் கணிசமாக உயர்ந்ததை தொடர்ந்து சீன அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு இந்த மோசடியை வெளியே கொண்டு வந்துள்ளனர்.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் அபரிமிதமான முயற்சியால் உண்மையான வீடியோ மற்றும் போட்டோக்களுக்கும், ஏ.ஐ. உருவாக்கப்பட்ட வீடியோ போட்டோக்களுக்கும் வித்தியாசமே தெரியாமல் பொதுமக்கள் குழப்பத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தொழில்நுட்பத்தின் மூலமாக பல்வேறு புதுமையான போட்டோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு அவை பொதுமக்களை அதிகம் கவர்கின்றன. நடைமுறையில் நடக்காத ஆனால் நாம் விரும்பக்கூடிய பல்வேறு விஷயங்களை இந்த ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலமாக வீடியோ மற்றும் போட்டோவாக கொண்டு வர முடியும்.
அதே நேரம் இந்த டெக்னாலஜியை பயன்படுத்தி சீனாவில் ஆன்லைனில் பொருட்களை வாங்குவோர் மோசடியில் ஈடுபட்டதாக சீன ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளது. அதாவது ஆன்லைனில் பொருட்களை வாங்கும் சில சீனர்கள் அதை போட்டோவாக எடுத்து இருப்பது போல் போட்டோவை எடிட் செய்து வருகிறார்கள்.
இதனை சம்பந்தப்பட்ட ஆன்லைன் தளத்திற்கு அனுப்பி அதன் மூலமாக தங்களுக்கு வேறு பொருளை மாற்றி கேட்கிறார்கள் அல்லது இழப்பீடு கூறுகிறார்கள். இது போன்ற சம்பவம் கணிசமாக உயர்ந்ததை தொடர்ந்து சீன அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு இந்த மோசடியை வெளியே கொண்டு வந்துள்ளனர்.
எலக்ட்ரானிக் டூத் பிரஷ், சட்டைகள் போன்ற பொருட்கள் உதவியால் அவை சேதமடைந்திருப்பதாக காட்டப்பட்டு இழப்பீடுகள் ஆன்லைனில் பெறப்பட்டுள்ளன. இதனால் உண்மையாகவே சேதம் அடைந்த பொருட்களை பெற்றிருப்பவருக்கும் பாதிப்புகள் ஏற்படுகிறது.
இதற்கிடையே ஒரு புகைப்படம் அல்லது வீடியோ ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதா? என்பதை கண்டறியும் வகையில் புதிய விதிகளை சீனா கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி அறிமுகம் செய்தது. இருப்பினும் நடைமுறையில் இந்த விதிமுறைகள் இன்னும் முழுமையான தீர்வினை வழங்கவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
November 30, 2025 8:11 PM IST
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நூதன முறையில் மோசடி.. சீனாவில் நடந்த சுவாரசிய சம்பவம்..


