ஒரு அமைப்பைத் தீவிரவாதக் குழு என்று முத்திரை குத்துவது, அதை இலக்கு வைத்து அழிப்பதற்கான பரந்த அதிகாரங்களை அமெரிக்கச் சட்டம் அமலாக்கம் மற்றும் ராணுவ முகமைகளுக்கு வழங்குவது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பு குறித்து வெனிசுலா வெளியுறவு அமைச்சகம் “தீவிரமாக, உறுதியாக, மற்றும் முற்றிலும் நிராகரிக்கிறோம்” எனக் கூறியுள்ளது.
இந்தக் கார்டெல்லின் உயர் பதவியில் உள்ள உறுப்பினர்களில் ஒருவராகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் வெனிசுலாவின் உள்நாட்டு மற்றும் நீதித்துறை அமைச்சர் டியோஸ்டாடோ காபெல்லோ (Diosdado Cabello), நீண்ட காலமாகவே இது ஒரு “கற்பனைக் கதை” என்று கூறி வருகிறார்.
ஆனால், அமெரிக்க வெளியுறவுத்துறை, கார்டெல் டி லாஸ் சோல்ஸ் இருப்பது மட்டுமல்லாமல், அது “வெனிசுலாவின் ராணுவம், உளவுத்துறை, சட்டமன்றம் மற்றும் நீதித்துறையை ஊழல் நிறைந்ததாக மாற்றியுள்ளது” என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

