Last Updated:
ஒரு ஃபார்மெட்டில் அதிகமான சதங்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி ஏற்படுத்தியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி சதம் அடித்துள்ளார். ஒருநாள் போட்டியில் இது விராட் கோலி அடிக்கும் 52-வது சதம் என்பது கவனிக்கத்தக்கது.
ஒட்டுமொத்த அளவில் விராட் கோலி 83-வது சதத்தினை சர்வதேச அரங்கில் பதிவு செய்துள்ளார். டெஸ்ட் போட்டி தொடரை தென் ஆப்பிரிக்கா அணியிடம் இழந்த நிலையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெயஸ்வாலும், ரோஹித் சர்மாவும் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 18 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 57 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த ருத்ராஜ் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். வாஷிங்டன் சுந்தர் 13 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் இழந்தாலும் விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை ஒவ்வொரு ஓவர்களிலும் வெளிப்படுத்தினார்.
மேலும் ஒரு ஃபார்மெட்டில் அதிகமான சதங்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி ஏற்படுத்தியுள்ளார். முன்னதாக இந்த சாதனை டெஸ்ட் ஃபார்மெட்டில் 51 சதங்கள் அடித்திருந்த சச்சின் வசம் இருந்தது. அந்த வகையில் சச்சின் சாதனையை முறியடித்துள்ளார் விராட் கோலி.
November 30, 2025 4:48 PM IST


