Last Updated:
தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் கடந்த வாரம் வழக்கத்தைவிடவும் அதிகமான மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
மழை வெள்ள பாதிப்புகள் காரணமாக இந்தியா, இலங்கை மட்டுமின்றி தென்கிழக்கு ஆசியா பகுதியில் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
டிட்வா புயலானது இலங்கையை புரட்டிப் போட்டு திணறடித்து வருகிறது. இதில் 15,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்து 45 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த புயலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்த தகவல்கள் கடந்த சில நாட்களாக வெளிவந்து சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதே போன்று தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் கடந்த வாரம் வழக்கத்தைவிடவும் அதிகமான மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ள தகவலின் அடிப்படையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தென்கிழக்கு ஆசியா பகுதியில் ஏற்பட்ட மழை வெள்ளத்திற்கு 460-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில் தாய்லாந்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கனமழை வெள்ளம் மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 14 லட்சம் வீடுகள் மூழ்கி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
November 30, 2025 2:28 PM IST


