Last Updated:
தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இருவரும் விளையாடி வருவதால், அவர்களுக்கு அதிக நேரம் ஓய்வு கிடைக்கிறது.
விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அந்த முடிவை பரிசீலனை செய்யும்படி பிசிசிஐ கோலியிடம் கோரிக்கை வைக்கக்கூடும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களாக திகழும் விராட் கோலி, ரோஹித் சர்மாவும் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டனர். அவர்கள் தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார்கள். 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருடன் அவர்கள் விடை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இருவரும் விளையாடி வருவதால், அவர்களுக்கு அதிக நேரம் ஓய்வு கிடைக்கிறது. இதனால் அவர்கள் தங்களது பிட்னஸ் மற்றும் ஆட்ட நுணுக்கங்களை பராமரித்துக் கொள்வதற்கு கால அவகாசம் கிடைக்கிறது.
மேலும் குடும்பத்தினருடன் இருவரும் தங்களது நேரத்தை கழித்து வருவதால், விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் இந்த ஓய்வை நன்றாக அனுபவித்து வருகிறார்கள். இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்தியா முழுமையாக இழந்தது.
தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், அடுத்த கட்டமாக முக்கிய நடவடிக்கையை மேற்கொள்வதற்கு பிசிசிஐ உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது.
November 30, 2025 2:10 PM IST


