சனிக்கிழமை ( 29) அன்று பெய்த கனமழை காரணமாக மாத்தளை மாவட்டத்தில் “அமங்காகோறல்ல” பிரதேச செயலகத்திற்குட்பட்ட கம்மடுவ பிரதேசத்தில் வசிக்கும் பல குடும்பங்களை ரத்தொட்டை இந்து மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்
கம்மடுவ பிரதேசத்தில் நாகல இங்குருவத்தே கோபி மலை என்ற பகுதிகளில் அதிகமான மக்கள் சிக்குண்ட நிலையில் இராணுவத்தினர் பல வழிகளில் முயற்சி செய்து அவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் மக்களுடைய பொருள் சேதம் அதிகம் மற்றும் மண்ணில் புதையுண்ட மக்களின் பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளனர் .




