மாவிலாறு நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு பல இடங்களில் உடைப்பெடுத்துள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்காரணமாக, குறித்த பகுதியில் உள்ள மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சேருவில ரஜமஹா விகாரை ஒரு பாதுகாப்பான இடமாகப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எச்சரிக்கை
நாட்டில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் காரணமாக மாவிலாறு மடை மற்றும் அணைக்கட்டு (Bund) ஆகியன தற்போது அபாயகரமான நிலையில் இருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
மஹாவலி கங்கையின் ஆற்றுப்படுகையில் தாங்க முடியாத அளவுக்கு அதிக நீர்வரத்து ஏற்பட்டுள்ளதாலும் அந்த பகுதியில் பெய்த மழையினாலும் இவ்வாறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
மேலும், குறித்த பகுதியில் உள்ள மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்தை நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

