இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள பவுமா தலைமையிலான தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டி, 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் 2 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்த இந்திய அணி, 25 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் மோசமான தோல்வியை பதிவு செய்தது.
இந்நிலையில், முதல் டெஸ்டில் ஷுப்மன் கில்லிற்கு காயம் ஏற்பட்டதால், ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்பட உள்ளார். மேலும், ஒரு நாள் போட்டியில் ஆல் ரவுண்டர் ஜடேஜா, விக்கெட் கீப்பர் பந்த் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இன்று மதியம் 1.30 மணிக்கு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் முதல் ஒரு நாள் போட்டி தொடங்க உள்ளது.
வெற்றிப் பயணத்தை தொடரும் முனைப்பில் தென் ஆப்ரிக்காவிற்கும், தோல்விக்கு பழிதீர்த்தாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியும் விளையாட இருப்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்திய உத்தேச அணி : ரோஹித் சர்மா, யாஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ரிஷப் பந்த், நித்திஷ் ரெட்டி, கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா, ஹர்ஸ்திப் சிங்
தென்னாப்பிரிக்க உத்தேச அணி : ஏய்டன் மார்க்கம், குயின்டன் டி-காக், பவுமா, மாத்யூ ப்ரீட்ஸ்கே, ரூபின் ஹெர்மன், டிவால்ட் ப்ரெவிஸ், மார்கோ ஜான்சன், கார்பின் போஷ், கேஷவ் மகாராஜ், நாண்ட்ரே பெர்கர், லுங்கி நிகிடி
November 30, 2025 8:00 AM IST

