Last Updated:
மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், இந்தியாவின் சுற்றுலாத் துறைக்கு எதிர்காலத்தில் மிகப் பெரிய வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறியிருக்கிறார்.
இந்தியாவில் சுற்றுலாத்துறை ஆண்டுதோறும் 20%க்கும் மேல் வளரக்கூடும். இதனால், சுற்றுலாவில் இருந்து வருவாய், வேலைவாய்ப்புகள் மற்றும் உள்ளூர் பொருளாதாரம் மேம்படும் என்று மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், இந்தியாவின் சுற்றுலாத் துறைக்கு எதிர்காலத்தில் மிகப் பெரிய வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறியிருக்கிறார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடருக்கு முன்பு செய்தியாளர்களுடன் பேசிய அவர், “பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் அகமதாபாத்தில் 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் போன்றவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய உந்துதலாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் கூறியதாவது, “இந்தியாவில் சுற்றுலாத்துறை ஆண்டுதோறும் 20%-க்கும் மேல் வளரக்கூடும். இதனால் சுற்றுலாவிலிருந்து வருவாய், வேலைவாய்ப்புகள் மற்றும் உள்ளூர் பொருளாதாரம் மேலும் வளர்ந்து முன்னேறும்” என்று அவர் கூறினார்.
FICCIஇன் 98-வது ஆண்டு பொதுக் கூட்டத்தின்போது, 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் உரிமையைப் பெறுவதற்கு அகமதாபாத்துக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அமைச்சர், இந்த நிகழ்வு இந்தியாவில் வலுவான வளர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டார். “இந்த நிகழ்வின் மூலம், 2030 மற்றும் அதற்குப் பிறகு சுற்றுலாத் திறன் மேலும் அதிகரிக்கும். நமது பொருளாதாரம் வளர்ந்து, உள்கட்டமைப்பு மேம்படும் நிலையில், இந்தியா குறிப்பிடத்தக்க சுற்றுலாத் திறனுடன் மேம்படும். எனவே, ஆண்டுதோறும் 20 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி என்ற சாதனையை எட்ட முடியும் என்று தான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
அமைச்சர் கூறியதாவது, “நாட்டில் 50 முக்கிய இடங்களுக்கு மட்டுமே உள்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பொருள், மக்கள் தொகை 1 மில்லியனுக்கு குறைவான பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. எனவே, நாட்டின் பெரிய நகரங்களில் மட்டுமே முழுமையான உள்கட்டமைப்பு சேவைகள் கிடைக்கின்றன.
அதே நேரத்தில் தனியார் முதலீட்டிற்கு அழைப்பு விடுத்த அமைச்சர், சுற்றுலாத் துறையில் மாற்றத்தை உருவாக்கும் சக்தி தனியாரின் முதலீட்டில் உள்ளது” என்று தெரிவித்தார். “விருந்தோம்பல் முறைகளை மேம்படுத்தவும், புதுமையான சுற்றுலா அனுபவங்களை உருவாக்கவும், உலக தரத்தில் சேவை தரத்தை உயர்த்தவும், வலுவான சமூக இணைப்புகளை உருவாக்கவும் இந்தியாவிற்கு துணிச்சலான தனியார் முதலீடு தேவை. அரசு இதற்கான சூழலை உருவாக்கியுள்ளது, இப்போது இந்தியாவின் சுற்றுலாத் தரத்தை உலகளவில் முன்னேற்றுவதற்கும், வடிவமைப்பதற்கும் இதுவே சரியான நேரம்” என்று அவர் கூறினார். இவை, இந்தியாவின் சுற்றுலாத் துறையின் எதிர்கால வளர்ச்சிக்கும், பொருளாதார மேம்பாட்டுக்கும் முக்கியக் குறியீடாக விளங்குகின்றன.
November 29, 2025 9:53 PM IST
சுற்றுலாத்துறை அடுத்த 5 ஆண்டுகளில் 20% வளர்ச்சியை எட்டும்…! மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் நம்பிக்கை…


