Last Updated:
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனேஸ் தனது காதலியை கரம்பிடித்தார்.
62 வயதான ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனேஸ் மற்றும் ஜோடி ஹேடன் ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இவர்களுக்கு திருமண நிச்சயம் நடந்த நிலையில், கன்பெராவில் உள்ள பிரதமர் இல்லத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் பங்கேற்றதாக தெரிகிறது. பிரதமர் பதவியில் இருக்கும் போது திருமணம் செய்த முதல் ஆஸ்திரேலிய பிரதமர் என்ற பெருமையையும் அல்பனேஸ் பெற்றார்.
2019ஆம் ஆண்டு தனது முதல் மனைவியை அந்தோனி அல்பனேஸ் விவாகரத்து செய்தார். இவர்களுக்கு நாதன் என்ற மகன் உள்ள நிலையில் அவரும் திருமணத்தில் பங்கேற்றார். கடந்த 2022ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது அந்தோனி அல்பனேஸ் உடன் ஜோடியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது திருமணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு தலைவர்களும் அவருக்கு தங்களது வாழ்த்தைத் தெரிவித்துள்ளனர்.
November 29, 2025 10:16 PM IST


