Last Updated:
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் திருமணத்தின்போது பெண் வீட்டார் வரதட்சணை கொடுத்தபோது மாப்பிள்ளை செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.
வரதட்சணை தடை சட்டம் 1961-ன் படி, இந்தியாவில் வரதட்சணை வாங்குவதும், கொடுப்பதும் குற்றம். இருந்தாலும், இன்றும் திருமணங்களில் வரதட்சணை முறைகள் இருந்தே வருகின்றன. இதனால், திருமணமான பெண்கள் பலரும் தங்கள் வாழ்நாளில் தினம் தினம் மன சித்திரவதையைச் சந்தித்தே தங்கள் வாழ்வை வாழ்ந்து வருகின்றனர்.
சில பெண்கள் இதன் காரணமாக தவறான முடிவுகளை எடுத்து, தங்கள் விலை மதிப்பில்லா உயிரையும் இழந்துவிடுகின்றனர். பல விழிப்புணர்வு, சட்டப் பாதுகாப்பு இருந்தும், உளவியல் சார்ந்த பிரச்சனைகளாலும், மன சித்திரவதையாலும் தவறான முடிவுகளை நோக்கி பெண்களை சமூகம் தள்ளி வருகிறது.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம், முசாபர்நகர் பகுதியைச் சேர்ந்த அவதேஷ் குமார் ராணா வரதட்சணைக்கு எதிராக தனது சொந்த வாழ்க்கையில் பெரும் முன்னெடுப்பை எடுத்துள்ளார். இது பலருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் அவதேஷ் குமார் ராணா. இவருக்கும் அதிதி என்ற பெண்ணுக்கும் கடந்த 22ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இவரது திருமணத்தின் போது, அதிதி வீட்டார் ரூ. 31 லட்சத்தை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். அவதேஷ் குமார் ராணா அதனை மறுத்தபோதிலும் பெண் வீட்டார் வரதட்சணை கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், இன்று (29ஆம் தேதி) அவதேஷ் குமார் ராணா, தனக்கு வழங்கப்பட்ட ரூ. 31 லட்சம் வரதட்சணை பணத்தை மீண்டும் பெண் வீட்டாரிடமே வழங்கியுள்ளார். மேலும், அதனை வீடியோ எடுத்தும் வெளியிட்டு, வரதட்சணைக்கு எதிரான விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவதேஷ் குமார் ராணா ஏ.என்.ஐ. செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், ”எனக்கு கடந்த 22ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண் வீட்டார் ரூ. 31 லட்சத்தை ஒரு தட்டில் வைத்து வழங்கினர்.
#WATCH | Muzaffarnagar, Uttar Pradesh: Awadhesh Kumar Rana returns dowry of Rs 31 Lakh on his wedding day.
He says, “… I got married on 22 November, Saturday… When we reached there, they brought Rs 31 Lakh in a plate. We refused and said that we would not take the money. We… pic.twitter.com/4DrT16iGBC— ANI (@ANI) November 29, 2025
நாங்கள் அதனை மறுத்து, வாங்க மாட்டோம் என்றோம். மேலும், அவர்கள் கொடுத்த வரதட்சணையை திருப்பி கொடுத்துள்ளோம். நாங்கள் 1 ரூபாய் மட்டும் ஏற்றுக்கொண்டோம். வரதட்சணை நடைமுறையை நிறுத்த வேண்டும்” என்றார்.
#WATCH | Muzaffarnagar, Uttar Pradesh: On her husband, Awadhesh Kumar Rana, refusing to take dowry on their wedding day, Aditi says, “… From the very beginning, we talked about Rs 1 when my marriage was fixed. Still, my grandfather gave whatever he felt was right. But my… https://t.co/j76gpGPkTV pic.twitter.com/V7JklsQL8h
— ANI (@ANI) November 29, 2025
இந்த நிகழ்ச்சி குறித்து அவதேஷ் குமார் ராணாவின் மனைவி அதிதி கூறுகையில், “எங்கள் திருமணம் நிச்சயக்கப்பட்டதில் இருந்தே நாங்கள் 1 ரூபாயைப் பற்றிப் பேசினோம். ஆனாலும், என் தாத்தா தனக்கு சரியென்று தோன்றியதைக் கொடுத்தார். ஆனால் என் மாமியார் ரூ. 1 மட்டுமே வாங்கி வரதட்சணையை மறுத்துவிட்டார். என் குடும்பத்திற்கு இது மிகவும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது” எனத் தெரிவித்தார்.
November 29, 2025 9:11 PM IST


