கோத்தா கினபாலு:
இன்று நடைபெற்ற சபா சட்டமன்றத் தேர்தலில் நடப்பு முதல்வர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் தலைமையிலான GRS கூட்டணி மீண்டும் மாநில ஆட்சியை அமைக்கும் நிலைக்கு வந்துள்ளது.
இன்று இரவு 9.30 மணிக்குத் தொகுப்பு முடிவுகள் வெளியாகும் நிலையில், GRS கூட்டணி மொத்தம் 23 தொகுதிகளில் வெற்றிப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், சபா மாநில அரசை அமைப்பதில் GRS பெரும்பான்மை நிலையைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளது.
மற்ற கட்சிகளின் நிலை:
வாரிசான் (Warisan) – 12 இடங்கள்
டத்தோ ஶ்ரீ ஷாபி அப்டால் தலைமையிலான வாரிசான், மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியாக 12 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
பாரிசான் நேஷனல் (BN) – 9 இடங்கள்
சுயேட்சை வேட்பாளர்கள் – 3 இடங்கள்
பக்காத்தான் ஹராப்பான் (PH) – 2 இடங்கள்
UPKO – 1 இடம்
STAR – 1 இடம்
இந்த முறை சபாவின் 73 சட்டமன்றத் தொகுதிகளிலும் பல்முனைப் போட்டி ஏற்பட்டது. கடுமையான தேர்தல் பிரசாரத்துக்குப் பின்னர், பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்று GRS ஆட்சியை மீண்டும் அமைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்படும் வரை கட்சிகள் மற்றும் ஆதரவாளர்கள் பதற்றத்துடன் காத்திருக்கின்றனர்.




