செம்பவாங்கின் முக்கிய பகுதியில் உள்ள விளையாட்டு திடலில் கருப்பு நிற பாம்பு ஒன்று காணப்பட்டது, இது அப்பகுதி மக்களிடம் பயம் கலந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்ட அதன் புகைப்படத்தை கண்ட இணையவாசிகள் சிலர், அது கடும் நச்சு கொண்ட “கருநாகம்” என்று அடையாளம் கூறினர்.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் அதிரடி சோதனை: 12 ஊழியர்கள் கைது – 3 பேருக்கு அபராதம்
அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் பூனைகளின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்த சில இணையவாசிகள், இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டனர்.
இந்த புகைப்படத்தை ஓர் குழந்தையின் பெற்றோர் அனுப்பியதாக ஃபேஸ்புக் பயனர் ஒருவர் கூறினார். மேலும், விழிப்புடன் இருக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.
முதல்முறை இல்லை, அப்பகுதியில் நாகப்பாம்பை பலமுறை கண்டதாக அவர் எம்எஸ் நியூஸ் தளத்திடம் கூறினார்.
அந்தப் பகுதிக்கு அருகே ஒரு கால்வாய் இருப்பதால் பாம்பை பிடிப்பதில் பெரும் சவால் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் – மலேசியா இடையே மீண்டும் பேருந்து சேவை… “ஏரோலைன்” நிறுவனத்தின் மகிழ்ச்சியான அறிவிப்பு
The post செம்பவாங்கில் காணப்பட்ட “கருநாகம்” – பொதுமக்கள் அச்சம் appeared first on Tamil Daily Singapore.

