சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 12 வெளிநாட்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இரவு நேரத்தில் சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த அதிரடி சோதனையை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) அதிகாரிகள் நடத்தினர்.
ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட்டில் விபத்து… ஒருவர் மரணம் – 47 வயதுமிக்க ஓட்டுநர் கைது
பலத்த மழை பெய்து கொண்டிருந்த போதிலும், நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 27) கடைசி இரவிலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை வரை, உட்லண்ட்ஸ் தங்கும் விடுதியை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர்.
இந்த அதிரடி சோதனையில் 11 பங்களாதேஷ் ஊழியர்களும் ஒரு மியான்மர் நாட்டவரும் பிடிபட்டனர், அவர்களுக்கு 23 முதல் 40 வயது வரை இருக்கும்.
அவர்களில் ஒருவரான 34 வயதுமிக்க பங்களாதேஷை சேர்ந்த ஊழியர் ஒருவர், போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டார் என CNB இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
முதன்முறையாக, தங்கும் விடுதி சோதனை நடவடிக்கையின் போது அதிகாரிகளுடன் செல்ல ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டன.
வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தாத லாரிகள்: பிடிபட்டால் தடை, வழக்கு… S$50,000 வரை அபராதம்
சோதனை நடவடிக்கையில் கைதான அனைவரிடமும் விசாரணைகள் நடந்து வருவதாக CNB தெரிவித்துள்ளது.
கூடுதலாக இந்த சோதனையில், 20 முதல் 40 வயதுக்கு உட்பட்ட 3 வெளிநாட்டினரிடமிருந்து 10 “புகை வராத புகையிலை” பைகள் இருந்ததை HSA அதிகாரிகள் கண்டறிந்ததாக தெரிவித்தது.
இதனை அடுத்து, அவர்களுக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், S$2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

