புயலின் தாக்கம்
- வவுனியாவில் தற்போது நிலவும் அசாதாரண காலநிலை தொடர்கின்றது-28.11.2025
ஓமந்தை இடையே ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, யாழ்-கண்டி நெடுஞ்சாலை (A9 பாதை) மறு அறிவித்தல்வரை மூடப்படுகிறது. - மாணவர் விடுதிகளின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அபாயம் காரணமாக மறு அறிவித்தல் வரை பேராதனை பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
- ஹிங்குராக்கொட விமானப்படைத் தளத்தின் எண்.7 படைப்பிரிவைச் சேர்ந்த பெல் 212, 3 மீட்புப் பணிகளை முன்னெடுத்துள்ளது. மனம்பிட்டி பாலத்தில் சிக்கித் தவித்த 13 நபர்களைக் காப்பாற்றப்பட்டுள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது.
- தற்போதைய அனர்த்த நிலைமைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் கட்சித் தலைவர்கள் இடையே விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
- நாட்டைப் பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் மற்றும் நாள் விடுப்புகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது
- நாட்டின் தற்போதைய மோசமான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் இராணுவ வீரர்களை ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி, இராணுவத் தளபதிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்
- 70 பயணிகளுடன் கலாவெவ பாலத்தில் சிக்கியுள்ள பேருந்தில், பயணிகளின் இடுப்பு அளவு வரை நீர் நிரம்பியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதுவரை 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
- மகாவ மற்றும் எலுவன்குளம் வெள்ளப்பெருக்கின் மத்தியில் மக்களை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன
மஹாவ, குருநாகல் மற்றும் புத்தளம், எலுவன்குளம் ஆகிய இடங்களில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வெளியேற்ற இலங்கை கடற்படை நிவாரணக் குழுக்களை அனுப்பியது.

