ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 92 இல் கார் ஒன்று மோதிய சம்பவத்தில் 78 வயது மதிக்கத்தக்க பெண் பாதசாரி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து நேற்று (நவம்பர் 27) காலை 8:25 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் காவல்துறை (SPF) Mothershipபிடம் கூறியது.
சிங்கப்பூர் – மலேசியா இடையே மீண்டும் பேருந்து சேவை… “ஏரோலைன்” நிறுவனத்தின் மகிழ்ச்சியான அறிவிப்பு
இதனை அடுத்து, விபத்தில் சிக்கிய பாதசாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் அவர் மாண்டதாக காவல்துறை தெரிவித்தது.
இந்த சம்பவத்தில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக 47 வயதுமிக்க கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
விசாரணைகள் தொடர்கின்றன.
சிங்கப்பூர் வந்து செல்லும் 2 விமானங்கள் ரத்து – ஸ்கூட் (Scoot) அறிவிப்பு

