Last Updated:
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஸ்கைரூட் இன்பைனிட்டி என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாகப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
விண்வெளித்துறையைப் போன்று அணுசக்தி துறையிலும் தனியாருக்கு அனுமதி வழங்கும் வகையில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஸ்கைரூட் இன்பைனிட்டி என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாகப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அத்துடன், நாட்டின் முதல் தனியாருக்குச் சொந்தமான ராக்கெட் விக்ரம் 1-ஐ அறிமுகம் செய்து வைத்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், விண்வெளித் துறையில் சீர்திருத்தம் செய்யப்பட்டதால் உலக முதலீட்டாளர்களுக்கு இந்திய விண்வெளித் துறை மீது ஈர்ப்பு அதிகரித்துள்ளதாகக் கூறினார். தனியார் துறையினரும் விண்வெளித் தொழில் துறையில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், இதனால், இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
விண்வெளித் துறையைப் போல அணுசக்தி துறையிலும் தனியார் முதலீட்டை அனுமதிப்பதற்காகச் சீர்திருத்தங்களை செய்து வருவதாகக் கூறிய பிரதமர், வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் முதலீட்டாளர்கள் பங்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
November 28, 2025 10:05 AM IST


