இது தொடர்பாக வெளியான செய்தியில், இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ரஹ்மானுல்லா (29). இவர் 2021-ல் அமெரிக்காவில் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது அவர் பயங்கரவாதச் செயல் குற்றச்சாட்டில் பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) விசாரணையில் இருக்கிறார்.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம், அகதிகள் வருகையைக் காட்டும் ஒரு விமானப் படத்தைக் காட்டி, “மிகவும் ஆபத்தான மற்றும் குற்றப் பின்னணி கொண்ட மக்கள் மட்டுமே அமெரிக்காவிற்கு வந்தார்கள். அமெரிக்கா விரும்பும் தகுதியான நல்லவர்கள் அல்ல.
தற்போது இந்த நிலைமை குழப்பமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. சந்தேக நபர் ஒரு ஆப்கானிஸ்தான் நாட்டவர். அவரை ஜோ பைடன் அரசுதான் இங்குக் கொண்டு வந்தது.
அமெரிக்காவுக்குள் வரும் மக்களைக் கட்டுப்படுத்துவதைவிடப் பெரிய பாதுகாப்புப் பிரச்னை எதுவும் இல்லை. உண்மையைச் சொன்னால், இப்படிப்பட்டவர்களை நாங்கள் இங்கு விரும்பவில்லை” என்றார்.

