Last Updated:
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மதர் டெய்ரி விற்பனை நிலையத்தின் சுவரில் நேரடியாக மோதியது. இந்தச் சம்பவம் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில், வேகமாக வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மதர் டெய்ரி விற்பனை நிலையத்தின் மீது மோதிய அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவமானது கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 3 மணியளவில் நடந்தது.
விபத்து நடந்த நேரத்தில் பேருந்து சுமார் 80 கிமீ வேகத்தில் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மதர் டெய்ரி விற்பனை நிலையத்தின் சுவரில் நேரடியாக மோதியது. இந்தச் சம்பவம் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதன் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அறிக்கையின்படி, இந்த பேருந்தானது எட்டாவா ரயில் நிலையத்திற்கு வெளியே இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மெயின்புரி நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மெயின்புரி செல்லும் வழியில் பேருந்தின் முன்னால் சென்ற ஸ்விஃப்ட் டிசையர் கார் திடீரென பிரேக் போடப்பட்டது.
அப்போது பின்னால் வேகமாக வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மதர் டெய்ரி விற்பனை நிலையத்தின் கேட்டை நோக்கிச் சென்று சுவரில் மோதியது. இந்த பேருந்து வேகமாக வந்து சுவரில் மோதியதால், பேருந்தின் முன் பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது, மேலும் பயணிகளிடையே பீதியையும், அலறலையும் ஏற்படுத்தியது. இந்தச் சம்பவமானது அங்கிருந்த விபத்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
यूपी –
जिला इटावा में प्राइवेट बस बेकाबू होकर मदर डेयरी की दीवार से टकराई। 2 सिक्योरिटी गार्ड और 33 यात्री घायल हुए।
साइकिल वाला : ‘इसे कहते हैं मौत को छूकर टक से वापस आना’ pic.twitter.com/9BtBfymaYv— Sachin Gupta (@SachinGuptaUP) November 24, 2025
வைரலாகும் இந்த வீடியோவில், ஒரு ஸ்கூட்டர் ஓட்டுநர் மற்றும் ஒரு சைக்கிள் ஓட்டுநர் நின்று கொண்டிருப்பதைக் காணலாம். அப்போது திடீரென்று ஒரு வெள்ளை நிற தனியார் பேருந்து அவர்களை நோக்கி வேகமாக வந்தது. அப்போது சைக்கிள் ஓட்டுநர் பேருந்தில் மோதவிருக்கும் நேரத்தில், அவர் தனது சைக்கிளுடன் ஒதுங்கிச் சென்று மயிரிழையில் உயிர் தப்பினார்.
விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், காரின் திடீர் பிரேக் பிடிப்பும், பேருந்தின் அதிவேகமும் விபத்துக்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. இந்த வீடியோவானது ட்விட்டரில் @SachinGuptaUP என்ற கணக்கில் இருந்து பதிவிடப்பட்டது.
பதிவிடப்பட்டதும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. சிலர் சைக்கிள் ஓட்டுநர் அதிர்ஷ்டசாலி என்றும், மற்றவர்கள் இந்த விபத்தைக் கொடூரமானது என்றும் கூறினர். மேலும் சிலர் காயமடைந்த பயணிகளுக்காக பிரார்த்தனை செய்வதாகக் கூறினர்.
November 27, 2025 9:48 PM IST
அதிர்ச்சியூட்டும் விதத்தில் விபத்துக்குள்ளான பேருந்து… மயிரிழையில் உயிர் தப்பிய நபர்…! வைரலாகும் வீடியோ…


