Last Updated:
கர்நாடகா முதலமைச்சர் பதவி விவகாரம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் முதலமைச்சர் பதவிக்காக சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் இடையே மோதல் நீடிக்கும் நிலையில், இதுகுறித்து அவர்களிடம் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
2023ஆம் ஆண்டு கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிப்பெற்ற போது, முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதலமைச்சராக இருப்பார் என்றும் பிறகு சிவகுமார் முதலமைச்சர் பதவியை வகிப்பார் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 20ஆம் தேதியோடு இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முதலமைச்சர் பதவி தொடர்பாக மோதல் தொடங்கி இருக்கிறது. கர்நாடக காங்கிரஸ் இரு பிரிவுகளாக பிரிந்துள்ள நிலையில், இதுகுறித்து ஆலோசனை நடத்தப்படும் என கார்கே கூறினார்.
ಕೊಟ್ಟ ಮಾತು ಉಳಿಸಿಕೊಳ್ಳುವುದೇ ವಿಶ್ವದಲ್ಲಿರುವ ದೊಡ್ಡ ಶಕ್ತಿ! pic.twitter.com/klregNRUtv
— DK Shivakumar (@DKShivakumar) November 27, 2025
இந்நிலையில், கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில், “சொல் தான் உலகில் சக்தி வாய்ந்தது. உலகின் மிகப்பெரிய சக்தி ஒருவரின் வார்த்தையைக் காப்பாற்றுவதாகும். அது நீதிபதியாக இருந்தாலும் சரி, ஜனாதிபதியாக இருந்தாலும் சரி, நான் உட்பட வேறு யாராக இருந்தாலும் சரி, அனைவரும் சொன்னபடி நடக்க வேண்டும். வார்த்தைதான் உலகின் பெரிய சக்தி” எனத் தெரிவித்துள்ளார்.
November 27, 2025 5:03 PM IST


